இந்த ஒரு விசயத்துக்கு நட்டு ரொம்ப கூச்சப்படுவாப்ல..! ஆஸ்திரேலிய மைதானத்தில் பேசிய அஸ்வின்.! தமிழில் தெறிக்கவிட்ட நம்ம நடராஜன்.!



aswin talk about nadarajan

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் வலைப்பந்து வீச்சாளராக வந்தவர் தமிழகத்தை சேர்ந்த இந்திய அணி வீரர் நடராஜன். தனது தனிப்பட்ட திறமையால் முதலில் ஒருநாள் போட்டியில் வாய்ப்பினை பெற்ற நடராஜன் அதனை அடுத்து T20 போட்டியிலும் வாய்ப்பினை பெற்று இந்திய அணியின் வெற்றிக்கு மிக உறுதுணையாக இருந்தார்.

nadarajan

இந்நிலையில் தற்போது அவருக்கு டெஸ்ட் போட்டியிலும் வாய்ப்பு கிடைத்து, இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிவருகிறார். மேலும், ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்றுவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி, தனது முதல் சர்வதேச போட்டிகளை பதிவு செய்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையையும் நடராஜன் தட்டிச்சென்றார்.

இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இரு அணிகளும் சமநிலையில் இருப்பதால் தொடரை வெல்லும் நோக்குடன் இரு அணிகளுமே விளையாடி வருகின்றன. நான்காவது டெஸ்ட் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கி விளையாடி வருகின்றனர். அவர்கள் மைதானத்தில் பேசிக் கொண்டிருந்த போது, அஸ்வின் அங்கு வந்த அவர்களை பேட்டியெடுத்தார்.


அப்போது நடராஜனிடம், நெட் பவுலராக இருந்த நீங்கள் நட்டுவாக மாறி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளீர்கள். அந்த அனுபவம் எப்படி உள்ளது? என நடராஜனிடம் கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த நடராஜன், ரொம்பவே சந்தோஷமாக இருக்கு. எனக்கு இதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. டெஸ்ட் போட்டியில் விளையாடுவேன் என நான் எதிர்பார்க்கவில்லை. நெட் பவுலராக இருந்து முடித்து விட்டு செல்லலாம் என்று தான் நினைத்தேன். வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப..ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா என தெரிவித்துள்ளார்.