Khel Ratna: உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு "கேல் ரத்னா" விருது; மத்திய அரசு அறிவிப்பு.!



 Central Govt Announce Khel Ratna Award for Gukesh 

விளையாட்டு வீரர்களுக்கான கேல் ரத்னா விருது உலக செஸ் சாம்பியன் குகேஷ் திம்மராஜுக்கும், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பார்க்கருக்கும் வழங்கப்படுகிறது. 

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு 2 பதக்கம் வென்ற மனு பார்க்கர், இந்திய அளவில் பாராட்டுக்களை பெற்றார். அதேபோல, குகேஷ் சர்வதேச அளவிலான செஸ் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியும் அடைந்தார். 

இதனால் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கிய இருவருக்கும், அவர்களின் திறனை ஊக்குவித்தும், பாராட்டியும் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. 

அதேபோல, பாரா தடகள பிரிவில் பிரவீன் குமார், ஹாக்கி வீர்ர், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் ஆகியோருக்கும் கேல் ரத்னா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே இன்று வெளியான உலக செஸ் சாம்பியன்ஷிப் தரவரிசையில், குகேஷ் நான்காவது இடத்தை தக்கவைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.