#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சென்னை அணியில் எதிர்பார்க்கப்படும் அந்த முக்கிய வீரர்! யார் தெரியுமா?
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபில் போட்டியில் சென்னை, கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டமானது சென்னை அணியின் சொந்த மண்ணான சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது.
இதுவரை நடந்த போட்டிகளில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் தலா 4 போட்டிகளில் வெற்றிபெற்று புள்ளி பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதுவரை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 8 போட்டிகளில் பங்கேற்று 6 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமா அமைந்துள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் ஹர்பஜன் சிங் மீண்டும் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இதற்கு முன்னதாக பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டுமே தனது பௌலிங்கில் அளித்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதினை தட்டிச் சென்றார் ஹர்பஜன் சிங்.
எனவே இன்றைய ஆட்டத்திலும் ஹர்பஜன் சிங் பங்களிப்பு மிகவும் எதிர்பாக்கப்படக்கூடிய ஒன்றாகவே அமையும்.