#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இப்படி ஒரு பிரச்சனை இருக்கா?? மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடந்தால் முதல் சிக்கல் சிஎஸ்கே வுக்கு தான்!! ஏன் தெரியுமா??
ஐபில் போட்டிகள் மீண்டும் நடத்தப்பட்டால் அது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.
ஐபில் 14 வது சீசன் T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவந்தநிலையில் கொரோனா காரணமாக போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது. ஐபில் போட்டியை பாதியில் நிறுத்தினால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு பெரிய இழப்பு நேரிடும் என்பதால் நிறுத்தப்பட்ட போட்டிகளை விரைவில் வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஐபில் போட்டிகள் மீண்டும் தொடங்கினாள் அது சென்னை அணிக்கு பிரச்சனையாக அமையும் என கூறப்படுகிறது. காரணம் இங்கிலாந்து வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாட இருப்பதால், அவர்கள் ஐபில் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் தெரிவித்தது.
இதனால் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கும் இங்கிலாந்து அணியை சேர்ந்த மொயின் அலி மற்றும் சாம் கர்ரன் இருவரும் இனிவரும் போட்டிகளில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சென்னை அணிக்கு மிகப்பெரிய பலமாக இருந்த மொயின் அலி, இனி வரும் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடவில்லை என்றால் அது சென்னை அணிக்கு பெரிய பின்னடைவாக கருதப்படும்.