கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 147 ரன்களில் சுருண்டது.! மிரளவைத்த பேட் கம்மின்ஸ்.!!
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 147 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஆஸ்திரேலியா அணி சார்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ் அதிகபட்சமாக 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். மேலும், ஜோஸ் ஹாசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் தலா 2 விக்கெட்டுகளையும், கேமரூன் கிரீன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பட்லர், 58 பந்துகளில் 39 ரன்களும், போப் 79 பந்துகளில் 35 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய இருந்த நிலையில், மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.