இந்திய அணியில் மீண்டும் வருவாரா ரோஹித் சர்மா? ஒருவழியாக வாய் திறந்த BCCI தலைவர் கங்குலி!

ஐபிஎல் தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வீரர்கள் பட்டியலில் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மாவின் பெயர் இடம்பெறாததால் பல விமர்சனங்கள் எழுந்தன. காயம் காரணமாக ரோஹித் சர்மா தற்போது ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை. ஆனால் அவருக்கு பெரிய அளவில் காயம் இருப்பது போன்று தோன்றாததால் அவர் ஏன் இந்திய அணியில் இடம்பெறவில்லை என பல கேள்விகள் எழுந்தன.
பிசிசிஐ வெளியிட்ட தகவலில் ரோஹித் ஷர்மாவின் உடல்நிலை குறித்து கண்காணித்து வருவதாக தெரிவித்தது. இந்நிலையில் ரோஹித் ஷர்மாவின் நிலை குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள கங்குலி, ஆஸ்திரேலியா தொடரில் அவர் ஆடுவதற்கு சரியான உடல் தகுதி வேண்டும். இந்த தொடர் துவங்குவதற்கு முன்னாள் ரோஹித் சர்மா குணமடைந்தால் அவரை அணியில் சேர்ப்பது குறித்து நிச்சயம் ஆலோசனை செய்யப்படும்.