தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
உலக கோப்பை 2023: போராடிய ஆஸ்திரேலியா; ஆப்படித்த விராட்-ராகுல் ஜோடி..!!
இந்திய அணி தனது முதலாவது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
13 வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், அக்டோபர் 5 ஆம் தேதி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட முன்னணி அணிகளுடன் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. மேற்கிந்திய தீவுகள் அணி முதன்முறையாக உலககோப்பை தொடருக்கு தகுதிபெறவில்லை.
இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் ஒவ்வொன்றும் தங்களுக்குள் தலா ஒரு லீக் போட்டியில் மோதும். அதில் முதல் 4 புள்ளிகளை பெறும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். இந்த தொடரின் 5 வது லீக் போட்டியில் முன்னாள் சாம்ப்பியன்களான இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதனை தொடர்ந்து டேவிட் வார்னர்-மிட்செல் மார்ஷ் ஜோடி அந்த அணியின் இன்னிங்ஸை தொடங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் மார்ஷ் 6 பந்துகளை சந்தித்து டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
அவரை தொடர்ந்து இந்திய அணியின் சுழல் தாக்குதலை சமாளிக்க முடியாமல், 49.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 41, ஸ்மித் 46, லபுஷேன் 27, மேக்ஸ்வெல் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 3, குல்தீப் யாதவ், பும்ரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து 200 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா-இஷான் கிஷன் ஜோடி டக்-அவுட் ஆக, பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யரும் டக்-அவுட் ஆகி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இதன் பின்னர் விராட் கோலியுடன் இணைந்த கே.எல்.ராகுல் சரிவை சரிகட்டும் விதத்தில் போராட, இந்திய அணி வெற்றியை நோக்கி பயணித்தது.
இந்த ஜோடியில் இருவரும் அரைசதம் கடந்து அசத்த, விராட் கோலி 85 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 97 ரன்கள் விளாசி இறுதி வரை களத்தில் நின்றார். 41.2 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்து, இந்த தொடரில் பங்கேற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்று முத்திரை பதித்தது.