44 வது செஸ் ஒலிம்பியாட்: தொட்டதெல்லாம் வெற்றி!,..முதல் சுற்று போட்டிகளில் இந்தியா ஆதிக்கம்..!



India dominated the first round of the 44th Chess Olympiad

சென்னை, மகாபலிபுரத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நாளான நேற்று முதல் சுற்று போட்டிகள் தொடங்கின. முதல் சுற்று போட்டிகளில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியதோடு, அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய ஆடவர் அணியின் 'ஏ ' பிரிவு அணி ஜிம்பாப்வே ஆடவர் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில்  4-0என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை எதிர் கொன்ட இந்தியா 'பி' அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தெற்கு சூடான் அணியை எதிர் கொண்ட இந்தியா 'சி' அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

முதல் சுற்றில் இந்திய மகளிர் ஏ அணி தஜிகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இந்திய மகளிஎ ஏ அணி 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா 'பி' மகளிர் அணி, வேல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் 4-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது இந்தியா 'சி' மகளிர் அணி ,ஹாங்காங் அணியை எதிர்கொண்டது இந்த போட்டியில்  4-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.