#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இப்படியெல்லாம் கூட கேட்ச் பிடிக்க முடியுமா? வியந்து பார்த்த விராட்கோலி! வீடியோ.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி T20 போட்டியில் விளையாடிவருகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டதை அடுத்து இரண்டாவது போட்டி மொஹாலியில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
போட்டியில் இந்திய அணி பேட் செய்தபோது 11வது ஓவரை தென் ஆப்பரிக்கா சுழற்பந்து வீச்சாளர் ஷம்சி வீச, துடுப்பாடிய தவான் பந்தை நேராக பறக்க விட்டார். பந்து நிச்சயம் பவுண்டரியை கடக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக தென்னாபிரிக்க வீரர் மில்லர் அந்த பந்தை பறந்து ஒற்றை கையால் கேட்ச் செய்தார்.
இதை சற்றும் எதிர்பாராத தவான் மில்லரை பார்த்து அதிர்ச்சி ஆனார். இது ஒருபுறம் இருக்க எதிர் திசையில் விளையாடிக்கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி ஓ மை காட், என்ன கேட்ச் என்பது போல அதிர்ச்சியாகி தவானை பார்க்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.
#KingKohli stunned 😵😵 by #DavidMiller catch. .
— Pavan (@Realistic__Life) September 19, 2019
Killer catch from #DavidMiller 👏👏👏#IndvsSA #INDvSA # pic.twitter.com/Nhds9FVqkw