"நான் வீழ்வேன் என நினைத்தாயோ!" ஹாட்ரிக் அரைசதமடித்து தொடரை கைப்பற்றி தந்த தல தோனி



India won 3 match series 2-1

மெல்பர்னில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தோனி ஹாட்ரிக் அரைசதமடித்தார் தொடர் நாயகன் விருதை பெற்றார். 

இப்போட்டியில் இந்திய அணியில் அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக கேதர் ஜாதவ், சிராஜுக்கு பதிலாக விஜய் சங்கர், குல்தீப் யாதவுக்கு பதிலாக யுவேந்திர சாகல் ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளனர். டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. மழையின் காரணமாக ஆட்டம் சற்று தாமதமாக தொடங்கியது. 

ind vs aus

ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ஆரம்பம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். முதல் 10 ஓவரிலேயே பின்ச்(14) மற்றும் கேரி(5) புவனேஷ்வர் பந்தில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கவாஜா, மார்ஷ் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடினர். ஆனால் அவர்களால் சாகலின் சுழலை சமாளிக்க முடியாமல் அவுட்டாகினர். 

அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கின. ஹ்ன்ஸ்கோம்ப் மட்டும் 58 ரன்கள் எடுத்தார். இறுதியில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் மட்டும் எடுத்துள்ளது. 

ind vs aus

இந்திய அணி சார்பில் சுழலில் மிரட்டிய சாகல் 6 விக்கெட்டுகளையும் புவனேஷ்வர் மற்றும் சமி தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா துவக்கத்திலிருந்தே தடுமாறினர். 6 ஆவது ஓவரில் ரோகித் 9 ரன்னிலும் 17 ஆவது ஓவரில் தவான் 23 ரன்னிலும் அவுட்டாகினர். பின்னர் ஜோடி சேர்ந்த கோலி மற்றும் தோனி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தியாவின் ரன் விகிதம் மிகவும் மோசமாக இருந்தது. 

ind vs aus

30 ஆவது ஓவரில் கோலி 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 114. பின்னர் தோனியுடன் ஜோடி சேர்ந்த ஜாதவ் பொறுப்புடன் ஆடினார். மறுமுனையில் வழக்கம் போல் நிதானமாக ஆடிய தோனி இந்த தொடரில் ஹாட்ரிக் அரைசதமடித்தார். அதன்பின் இருவரும் ரன் விகிதத்தை அதிகரித்தனர். கடைசியில் இந்திய அணி 49.2 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. தோனி 87, ஜாதவ் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

ind vs aus

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்று தொடரை கைப்பற்றியது. சாகல் ஆட்டநாயகனாகவும், தோனி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.