#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தேர்வுக் குழுவின் மீது சர்ச்சையை கிளப்பும் ஹர்பஜன் சிங்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக விளங்கியவர் ஹர்பஜன் சிங் தற்போது எந்த வடிவிலான போட்டிகளிலும் இந்திய அணியில் இடம் கிடைக்காததால் கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இந்திய அணி நிர்வாகம், தேர்வுக்குழு போன்றவற்றை தனது வர்ணனையின் மூலம் கடுமையாக அவ்வப்போது விமர்சித்தும் வருகிறார்.
சமீபத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியின் செயல்பாடு குறித்து விமர்சித்திருந்தார். வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு இந்திய அணியின் தேர்வு குறித்து தற்சமயம் விமர்சித்துள்ளார். அவர் கூறும்போது எந்த தகுதியின் அடிப்படையில் தேர்வு குழுவானது வீரர்களை தேர்வு செய்கிறது என்பது எனக்கு தெரியவில்லை.
இந்த டெஸ்ட் தொடரில் கருண் நாயருக்கு இடம் கிடைக்கவில்லை. கடந்த 6 டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும் ஆடும் 11 பேர் கொண்ட குழுவில் அவர் இடம் பெறவில்லை. இந்த ஆறு போட்டிகளிலும் வெறும் பார்வையாளராக மட்டுமே அமர்த்தி வைக்கப்பட்டார். தற்போது அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை. இது எந்த விதத்தில் நியாயம் என்பது எனக்கு புரியவில்லை என்று கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
அதேபோல இந்திய அணியில் சில வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படுகிறது அதே நேரத்தில் சிலருக்கு ஒரு சில போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டு அவர்கள் கழட்டி விடும் நிலைமையும் உள்ளது.
அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தற்சமயம் தேர்வாகியுள்ள ஹனுமா விஹாரி இந்த தொடரில் சிறப்பாக ஆட வில்லை என்றால் அடுத்து வரும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு கருண் நாயருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பதும் கேள்விக்குறிதான். எனவே அவர் எந்த நம்பிக்கையுடன் இருப்பார் என்று கிரிக்கெட் தேர்வுக்குழு விளக்கமளிக்குமா. என்று ஹர்பஜன் சிங் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.