மன்கட் சர்ச்சை: அஸ்வின் குறித்து முதன்முறையாக வாயை திறந்த பட்லர்; என்ன சொன்னார் தெரியுமா?



ipl 2019 manket wicket - ashwin - butler- kxip vs rr

கடந்த 2008ஆம் ஆண்டு தொடக்கப்பட்டு 11 சீசன் நிறைவடைந்த ஐபிஎல் தொடர் 12வது சீசன் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இத்தொடர் துவங்கிய காலத்திலிருந்தே இன்று வரை ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளுக்கு பேராதரவு அளித்து வருகின்றனர். 

இந்நிலையில் ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியும் பஞ்சாப் அணியும் மோதின. இந்த போட்டியில் 185 ரன் இலக்கை நோக்கி சிறப்பாக ஆடிய ராஜஸ்தான் அணியின் பட்லர் அரைசதம் அடித்தார்.

IPL 2019

அவர் 69 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 13 ஆவது ஓவரை வீசிய அஸ்வின் மிகவும் சாமர்த்தியமாக பந்து வீசுவதை திடீரென நிறுத்தி, கிரீஸை விட்டு வெளியேறிய பட்லரை ரன் அவுட் ஆக்கினார். அதன் பிறகு ஆட்டமே தலைகீழாக மாறி ராஜஸ்தான் அணி விக்கெட்டுகள் மளமளவென சரிந்து தோல்வியை சந்தித்தது.

இந்த முறையில் விக்கெட்டை வீழ்த்துவது கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டு இருந்தாலும், அது விளையாட்டு உணர்வுகளுக்கு எதிரானது என பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகள் தெரிவித்தாலும் சிலர் ஆதரவும் அளித்தனர்.

IPL 2019

அஷ்வின் செய்த மன்கட் ரன் அவுட் குறித்து பலவிதமான கருத்துகள் உலாவந்த போதிலும் அதனால் பாதிக்கப்பட்ட பட்லர் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இதுகுறித்து முதன்முறையாக பேசியுள்ள பட்லர், அந்த நேரத்தில் நான் உண்மையாகவே மிகுந்த ஏமாற்றமடைந்தேன். அந்த ஸ்டைலை நான் விரும்பவில்லை. அந்த நேரத்தில் போட்டியை எப்படி ஜெயிப்பது என்று நினைப்பேனா? அல்லது நான் ஸ்டிரைக்கர் முனையில் நிற்பது குறித்து நினைப்பேனா என தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.