#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னங்க இது!! முதல் போட்டியிலையே இப்படி ஒரு வெறித்தனமான ஆட்டம்!! பிரித்துமேய்ந்த ப்ரித்விஷா!! பந்தாடிய தவான்..
சென்னை அணியை அடித்து பந்தாடி, அசத்தல் வெற்றி பெற்றது டெல்லி அணி.
ஐ.பி.எல் 14-வது சீசன் கடந்த 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த தொடரின் 2-வது நாளான நேற்று தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்களாக டு பிளசிஸும் ருதுராஜ் கெய்க்வாட்டும் களமிறங்கினர். ஆனால் சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. டு பிளசிஸ் ரன் எதுவும் இன்றி எல்.பி.டபிள்யூ முறையில் டக் அவுட் ஆனார். அடுத்த ஓவரில் ருதுராஜும் 5 ரன்களில் வெளியேறினார்.
இதனையடுத்து நிதானமாக ஆடிய மொயின் அலி 36 ரன்கள் எடுத்தநிலையில் அஸ்வின் ஓவரில் ஆட்டமிழந்தார். சென்னை அணியில் சிறப்பாக ஆடிய சுரேஷ் ரெய்னா 36 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் உள்பட 54 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து.
இதனையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் துவக்க வீரர்கள் அதிரடி காட்டினர். தொடக்க வீரர்களாக இறங்கிய ப்ரித்விஷாவும், தவானும் மிக அதிரடியாக விளையாடி இருவரும் 81 பந்துகளில் 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
பிரித்வி ஷா 72 ரன்களுக்கும், ஷிகர் தவான் 85 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய வீரர்கள் எளிதாக ஆடி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வெற்றிபெற செய்தனர்.