மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதிரடி வீரர் நீக்கம்! சென்னை அணியில் மூன்று புது வீரர்கள்! இன்று வெல்லுமா தோனியின் வியூகம்?
சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் கடந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதுவரை 40 போட்டிகள் முடிந்துள்ளநிலையில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இதற்கு முன்னர் நடந்த முதல் சுற்றில் மும்பை அணியை தோற்கடித்து சென்னை அணி வெற்றிபெற்றது.
இன்றைய போட்டியில் மும்பை அணி சென்னை அணியை பழிதீர்த்து புள்ளி பட்டியலில் முதல் இடத்திற்கு செல்ல தீவிரமாக உள்ளது. அதேநேரம் 10 போட்டிகளில் விளையாடி, 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை அணி இந்த போட்டியில் கட்டாயம் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.
இதனால் இன்றைய போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. சார்ஜா மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் இம்ரான் தாஹிர், ஜெகதீசன், ருத்ராஜ் கெய்க்வாட் ஆகியோர் சென்னை அணியில் இடம் பெற்றுள்ளனர். வாட்சன் மற்றும் கேதர் ஜாதவ் இருவரும் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.