#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மூன்றாவது சதமடித்த ஜோ ரூட்! உலக கோப்பையில் புதிய சாதனை
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் 19ஆவது ஆட்டம் இன்று இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆட்டத்தின் துவக்கம் முதலே வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் சரிய துவங்கின. அந்த அணியின் பூரன் மட்டும் அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 212 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முப்பத்தி நான்காவது ஓவரிலேயே 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜோ ரூட் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்தார். இந்த உலக கோப்பை தொடரில் ஜோ ரூட் அடித்த மூன்றாவது சதம் இதுவாகும்.
இங்கிலாந்து அணிக்காக ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சன் இரண்டு சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.