96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தோனியின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்த விராட் கோலி!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் இரண்டையும் வென்றதன் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த ஒரு மாதமாக மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் அனைத்து தொடர்களையும் கைப்பற்றியது இந்திய அணி.
இந்த வெற்றியின் மூலம் அதிக டெஸ்ட் போட்டிகளை வென்ற இந்திய அணியின் கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். 48 டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கியுள்ள அவர் 28 போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக தோணி 27 போட்டிகள் வெற்றியடைய செய்துள்ளார்.
வெளிநாடுகளில் அதிக போட்டிகளை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார் கோலி. இதற்கு முன்னதாக வெளிநாடுகளில் 28 போட்டிகளில் தலைமையேற்று கங்குலி 11 வெற்றிகளை பெற்றுள்ளார். தற்போது 26 போட்டிகளுக்கு தலையேற்றுள்ள கோலி இதுவரை 12 போட்டிகளில் வெற்றியை தேடி தந்துள்ளார்.
ஏற்கனவே முதல் போட்டியில் வென்றதன் மூலம் வெளிநாடுகளில் அதிக போட்டிகளை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார் கோலி. இதற்கு முன்னதாக வெளிநாடுகளில் 28 போட்டிகளில் தலைமையேற்று கங்குலி 11 வெற்றிகளை பெற்றுள்ளார். தற்போது 27 போட்டிகளுக்கு தலையேற்றுள்ள கோலி இதுவரை 13 போட்டிகளில் வெற்றியை தேடி தந்துள்ளார்.