தம்பி ராமையாவின் ராஜாகிளி திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
தோனிக்கு இவ்வளவு மரியாதையா! ரசிகர்களை திகைக்க வைத்த கோலியின் ஒற்றை வார்த்தை
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி நாளை மான்செஸ்டரில் நடைபெறுகிறு. நாளைய போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.
இந்நிலையில் நாளைய போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் தோனியை குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அப்போது புண்ணகைத்துக்கொண்டே பேச்சை துவங்கிய விராட் கோலி "இந்தக் கேள்வியை நிச்சயம் உங்களில் யாராவது கேட்பீர்கள் என்று எனக்கு முன்னரே தெரியும்" என ஆரம்பித்தார்.
தோனியை பற்றி மேலும் பேச துவங்கிய அவர், "தோனியை பற்றி பேச பல சிறப்பான விசயங்கள் உள்ளன. அவருக்கு கீழ் ஆடிய அனைவரும் இதை தான் சொல்வார்கள். அவரைப் போல சாதித்தவர்களை போற்றுவதுடன் என்றும் நன்றியுடன் இருக்க வேண்டும்.
நான் அவர் மேல் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். மரியாதை என்றால் சாதாரண மரியாதையல்ல 'வானத்தின் உயரத்தில் வைத்து அவருக்கு நான் என்றும் மரியாதை செலுத்துவேன். அவருடன் இத்தனை வருடங்கள் ஆடியதை நினைத்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்" என தெரிவித்தார்.