சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை இவர் தான் தவிடுபொடியாக்குவார்.! அடித்து கூறும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்.!



mark-taylor-talk-about-joe-root

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லண்டன் லாட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம் இந்த போட்டியில் அவர் 10000 ரன்கள் என்ற மைல்கல் சாதனையை எட்டினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி குறைந்த ஆண்டுகளில் 10000 ரன்களை எட்டியவீரர் என்ற சாதனையை ரூட் படைத்துள்ளார்.

இந்தநிலையில், டெஸ்ட் போட்டிகளில் சச்சினின் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனயை ஜோ ரூட் முறியடிப்பாரென ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மார்க் டெய்லர் கருத்து தெரிவித்துள்ளார். ஜோ ரூட் 118 போட்டிகளில் 10015 ரன்களை குவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 200 போட்டிகளில் 15921 ரன்கள் எடுத்ததுதான் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  
  Joe root
ஜோ ரூட் இன்னும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியும். அதனால் சச்சின் சாதனையை இவரால் எளிதாக முறியடிக்க முடியுமெனத் தோன்றுகிறது. 2, 3 வருடங்களாகவே இவரது பேட்டிங்கை கவனித்து வருகிறேன். அவருடைய கிரிக்கெட் வாழ்வில் உச்சநிலையில் இருக்கிறார். அவர் உடல்நலத்துடன் இருந்தால் 15000 ரன்களை எளிதாக அடைய முடியும் என டெய்லர் கருத்து தெரிவித்துள்ளார்.