#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் சுடரை வரவேற்க ஆவலுடன் உள்ளோம்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..!
உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதன் முறையாக இந்தியாவில் நடைபெறுவதை ஒட்டி, அதற்கான ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த 1927 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டி தொடர் இந்தியாவில் முதல் முறையாக நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் உலகம் முழுவதிலும் உள்ள 189 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
முன்னதாக, இந்தியாவில் முதன் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டம் நடத்தப்படும் என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து செஸ் ஒலிம்பியாட்டின் முதல் ஜோதி ஓட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது.
இந்திராகாந்தி மைதானத்தில் மாலை 5 மணியளவில் இந்த ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடர் ஓட்டம், கிட்டத்தட்ட 40 நாட்கள் இந்தியாவில் உள்ள 75 நகரங்களின் வழியாக வலம் வரும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
As our Hon. @PMOIndia has launched the inaugural edition of #ChessOlympiad Torch instituted by @FIDE_chess, Chennai is proud to be behind this historic moment for India, the birthplace of Chess. (1/2) https://t.co/l2Og1zXVIC
— M.K.Stalin (@mkstalin) June 19, 2022
செஸ் ஒலிம்பியாட் ஜோதி வரும் ஜூலை மாதம் 27 ஆம் தேதி மாமல்லபுரத்தை வந்தடையும் என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
உலக செஸ் பேரவை முதன்முறையாகத் தொடங்கியுள்ள செஸ் ஒலிம்பியாட் சுடரின் தொடர் ஓட்டத்தை இந்தியப் பிரதமர் தொடங்கி வைத்துள்ள இவ்வேளையில், இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிகுந்த இத்தருணத்தின் பின்னணியில் இருப்பதில் சென்னை பெருமை கொள்கிறது.
தொடர் ஓட்டத்தின் முடிவில் மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் சுடரை வரவேற்க ஆவலுடன் உள்ளோம் என்று அவர் பதிவு செய்துள்ளார்.