வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
தனது பிறந்தநாள் தினத்தன்று தெறிக்கவிட்ட யார்க்கர் மன்னன் நடராஜன்.! ஸ்டெம்பை குத்தி கிளப்பி பவுண்டரிக்கே சென்ற பந்து..! வைரல் வீடியோ
2022 ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், லக்னோஅணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய தமிழகத்தை சேர்ந்த நடராஜனுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். பிறந்தநாளில் தனது அபார பந்துவீச்சின் மூலம் எதிரணி வீரர்களைமிரட்டிய யார்க்கர் மன்னன் நடராஜன் நேற்றய ஆட்டத்தில் 2 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.
Krunal Pandya b Natarajan 6 (3b 1x4 0x6) SR: 200 🎯 🎳 pic.twitter.com/hksfLGbxSB
— Live Cricket Master Updater (@MohsinM55415496) April 4, 2022
அதிலும் குர்னல் பாண்டியா 6 ரன்கள் எடுத்து விளையாடி கொண்டிருந்த போது நடராஜன் அவருக்கு யார்க்கர் வீசினார். அவர் வீசிய பந்தானது ஸ்டெம்பை தெறிக்கவிட்டதோடு நேராக பவுண்டரி லைனுக்கே சென்றுவிட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.