வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
சூப்பர் நட்டு!! தனது மனைவி நண்பர்களுடன் நடராஜன் எங்கு சென்றுள்ளார் பார்த்திங்களா!! வைரல் புகைப்படங்கள்.
தனது மனைவி, குழந்தை மற்றும் நண்பர்களுடன் கொல்லிமலை சுற்றுலா சென்றுள்ளார் தமிழக வீரர் நடராஜன்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபில் போட்டியில் ஹைத்ராபாத் அணியில் விளையாடியது மூலம் கிரிக்கெட் உலகில் பிரபலமானார் நடராஜன். அவரது சிறப்பான பந்து வீச்சினால் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்திரேலியா அணியுடனான போட்டியில் நடராஜன் விளையாடி பெரும் வரவேற்பை பெற்றார்.
அதேபோல் சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் நடராஜன் சிறப்பாக செயல்பட்டார். இந்நிலையில் விரைவில் தொடங்க இருக்கும் ஐபில் போட்டிகளுக்காக தயாராகிவரும் நடராஜன் சமீபத்தில் தனது மனைவி, குழந்தை மற்றும் நண்பர்களுடன் கொல்லிமலை சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடராஜன், "வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களும் சாகசங்களும்தான்" என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.