வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
ஐபிஎல் மெகா ஏலத்தில் தமிழன் நடராஜனுக்கு மட்டும் பாரபட்சமா.? கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்காக இறுதி செய்யப்பட்ட வீரர்களின் இறுதிப்பட்டியலும், அவர்களின் அடிப்படை தொகையும் நேற்று அறிவிக்கப்பட்டன. அதன்படி தமிழகத்தை சேர்ந்த மொத்தம் 30 வீரர்களின் பெயர்கள் இந்த முறை மெகா ஏலத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் யார்க்கர் மன்னனான நடராஜனுக்கு ரூ. 1 கோடி என்ற தொகையை அறிவித்துள்ளது பிசிசிஐ. இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறைந்த ஆட்டங்களில் சர்வதேச அணியில் ஆடி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடராஜன். ஒரே ஒரு சீசனில் நடராஜனின் ஆட்டத்தை பார்த்து 3 வடிவ கிரிக்கெட்டிலும் வாய்ப்புக் கொடுத்த பிசிசிஐயே தற்போது அவரை குறைந்த விலைக்கு இறக்கியுள்ளது.
பொதுவாக முன்னணி பவுலர்களுக்கு அடிப்படை தொகையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்படும். அதற்கு அடுத்த வரிசையில் இருப்பவர்களுக்கு ரூ. 1 1/2 கோடி நிர்ணயிக்கப்படும். ஆனால் தற்போது பார்ம் அவுட்டாகியுள்ள சில வீரர்களுக்கு ரூ. 2 கோடி அடிப்படை தொகையாக நிர்ணயித்துள்ள நிலையில், நடராஜனுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.