வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
நேற்றைய போட்டியில் தமிழக வீரர் நடராஜன் ஏன் களமிறங்கவில்லை.? இது தான் காரணமாம்.!
நேற்றைய ஐபிஎல் போட்டியில், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. நேற்றய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து மும்பை அணி13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்று நடந்த ஆட்டத்தில் சன் சைர்ஸ் அணியில் தமிழக வீரர் நடராஜன் களமிறங்காதது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து சன்ரைசர்ஸ் அணியின் ஆலோசகர் விவிஎஸ் லட்சுமண் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த ஆட்டத்தில் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் களமிறங்கவில்லை. அவரின் இடதுகாலில் லேசான வீக்கம் இருந்தது, இதனால், தொடர்ந்து அவர் சிரமப்படக்கூடாது என்பதற்காகவே அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அகமது களமிறக்கப்பட்டார். நடராஜன் காலில் ஏற்பட்ட வீக்கம் குறித்து மருத்துவர்களிடம் ஆலோசித்து வருகிறோம். சன்ரைசர்ஸ் மருத்துவ ஆலோசகர்கள் சரியான முடிவை எடுப்பார்கள் என தெரிவித்துள்ளார்.