#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சதம் விளாசிய மகன்கள்..! கட்டித்தழுவிய தந்தையர்கள்.! வைரல் வீடியோ
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.
இங்கிலாந்து அணியின் ஒல்லி போப், ஜோ ரூட் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் சதமடித்து அசத்தினர். ஒல்லி போப்145 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட் 176 ரன்னில் ஆட்டமிழந்தார்.
Beautiful moment from today ❤️
— England’s Barmy Army (@TheBarmyArmy) June 12, 2022
The fathers of Ollie Pope and Joe Root embrace as both their sons reach 💯 for 🏴#ENGvNZ pic.twitter.com/r2j13MKyjh
போப், ரூட் ஆகியோரது தந்தையர்கள் போட்டியை காண மைதானத்திற்கு வந்திருந்தனர். ஜோ ரூட் தனது 27வது சதத்தை விளாசிய பின் பேட்-ஐ தூக்கி கொண்டாடும்போது போப்பின் தந்தையும், ரூட்டின் தந்தையும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி தங்கள் மகன்களின் சதங்களை கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.