வெங்கடேஷ் அய்யருக்கு ஏன் பந்து வீச வாய்ப்பு கொடுக்கவில்லை.? ஷிகார் தவான் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!



shikhar dhawan talk about venkadesh iyer

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ரன்கள் மட்டுமே எடுத்து  31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் ஆல்-ரவுண்டராக விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஒரு ஓவர் கூட பந்துவீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. வழக்கமாக அணியில் இடம்பெற்றிருந்த 5 பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கிய போதும் அவரை ஏன் பயன்படுத்தவே இல்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், இது குறித்த கேள்விக்கு இந்திய அணியின் துவக்க வீரரான ஷிகர் தவான் கூறுகையில், இந்த போட்டியில், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நன்றாக ஒத்துழைத்தது. அதே போன்று சீரான வேகத்தில் தென் ஆப்பிரிக்கா அணி ரன்களை எடுத்துக் கொண்டிருந்ததால், ஒரு புதிய பவுலரை கொடுக்கும் போது, அது ஒருவேளை பயனளிக்கவில்லை என்றால், தென் ஆப்பிரிக்கா அணி மேலும் அதிக ரன்களை குவிக்க வழி வகுத்துவிடும். இதன் காரணமாகவே ஐந்து பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து பவுலிங் செய்து வந்தனர். இன்றைய சூழ்நிலை நமக்கு சாதகமாக இருந்திருந்தால், அவருக்கு பந்து வீச வாய்ப்பு கொடுத்திருக்கப்படும் என தெரிவித்துள்ளார்.