மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல தொகுப்பாளினி மாயந்தி லாங்கரை நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கப்பட்டதன் காரணம் என்ன தெரியுமா..
ஐக்கிய அரபு அமீரகத்தில் 13 வது ஐபிஎல் போட்டியானது நடைப்பெற்று வரும் நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் பிரபல தொகுப்பாளினி மாயந்தி லாங்கர் கலந்து கொள்ள மாட்டார் என ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் மூலம் இந்தியா மட்டுமன்றி உலக அளவில் அதிகப்பட்ச ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் பிரபல தொகுப்பாளினி மாயந்தி லாங்கர். இவர் பிரபல கிரிக்கெட் வீரரான ஸ்டூவர்டு பின்னியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் மாயந்தி லாங்கர் நடப்பு ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளாததற்கான காரணம் வெளியாகியுள்ளது. அதாவது மாயந்தி-பின்னி தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது. மேலும் இது பற்றி மாயந்தி லாங்கர் பேசியதாவது
தான் நடப்பு ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும், மே மாதம் போட்டி நடந்திருந்தால் நிச்சயமாக கலந்திருப்பேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் தான் கர்ப்பமாக இருந்தபோது முக்கியமான சில உதவிகளை ஐபிஎல் நிர்வாகம் செய்ததாகவும் அதற்கு மிகவும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறிய அவர் விரைவில் மீண்டும் தொகுப்பாளினியாக திரும்பி வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.