என்னையாவா ஐபிஎல்லில் ஏலம் எடுக்கல..! கெத்து காட்டிய ஸ்ரீசாந்த்.! அஜித் டைலாக் பேசுனா மட்டும் போதாது..!



srisanth played very well

சூதாட்ட பிரச்சனையில், இந்திய அணியில் இருந்து விலக்கப்பட்ட ஸ்ரீசாந்த் ஹீரோ, பிக் பாஸ் நிகழ்ச்சி சினிமாவில் வலம்வந்தார். கிரிக்கெட் ஆடாத காரணத்தால் பாஜகவில் சேர்ந்து தேர்தலில் எல்லாம் ஸ்ரீசாந்த் நின்றார். தற்போது இவர் மீதான தடை முடிவிற்கு வந்துள்ள நிலையில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்ரீசாந்த் ஆட தொடங்கி உள்ளார்.

இந்நிலையில், தான் மீண்டும் உற்சாகத்துடன் திரும்ப வருகிறேன் என்று ஸ்ரீசாந்த் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் "இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையிலும் நீ தோத்துட்ட.. நீ தோத்துட்டன்னு........ உன் முன்னாடி நின்னு அலறினாலும்… நீயா ஒத்துக்கிற வரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது…! என்ற விவேகம் படத்தின் வசனத்தை வைத்த வீடியோ வெளியிட்டார்.

இந்த நிலையில் விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் ஸ்ரீசாந்த் மிகவும் அதிரடியாக பவுலிங் செய்து வருகிறார். விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் உத்தரப் பிரதேச அணிக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரள வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

2021 ஐபிஎல் போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருந்தார் ஸ்ரீசாந்த். ஆனால் ஸ்ரீசாந்தை எந்த அணியும் ஏலம் எடுக்க முன் வரவில்லை. இந்தநிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக விஜய் ஹசாரே கோப்பையில் உத்தரப்பிரதேச அணிக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார் ஸ்ரீசாந்த்.