வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா.! வெற்றியை உறுதி செய்த தமிழனை பாராட்டிய தமிழிசை.!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, முதலில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் தோல்வியடைந்தது. இந்தநிலையில், இரு அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வந்தது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றது.
இந்தநிலையில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இதனால் டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றி இங்கிலாந்து அணியை வெறுங்கையோடு அனுப்பியது இந்திய அணி.
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு எனத மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் தனது சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்த கிரிக்கெட் வீரர் திரு.நடராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) March 28, 2021
நேற்றைய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய 329 ரன்கள் எடுத்தது. 330 என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 14 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்தது. கடைசி ஓவரை நடராஜன் சிறப்பாக வீசி இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
இந்திய அணியின் வெற்றி குறித்து தமிழிசை சவுந்தரராஜன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு எனத மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் தனது சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்த கிரிக்கெட் வீரர் திரு.நடராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.