நேற்றைய ஆட்டம் முடிந்து மைதானத்தில் நடராஜன் இப்படி பேசுவார் என்று யாராவது நினைத்திருப்போமா.? வைரல் வீடியோ.!



tamilnadu-player-talk-in-tamil-after-finishing-match

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. இதனை தொடர்ந்து நடந்த இருபது ஓவர் போட்டியில் இடதுகை பந்து வீச்சாளர் நடராஜன் இந்திய அணியில் சிறப்பாக ஆடி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதனை தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆனால் இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. அதனை தொடர்ந்து இந்த தொடரில் சிறப்பு ஆட்ட நாயகனுக்கான விருது ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், அதை பெற்றுக் கொண்ட ஹர்திக், அந்த விருதுக்கு தகுதியானவர் தமிழக வீரர் நடராஜன் என் கூறி கோப்பையை அவரிடம் வழங்கினார். மேலும் கேப்டன் கோலியும் டி 20 தொடருக்கான டெட்டால் கோப்பையை நடராஜனிடமே கொடுத்தார்.

இவற்றை தொடர்ந்து தமிழக வீரர் நடராஜன் சோனி தொலைக்காட்சியில் தமிழிலேயே தொடர் குறித்து பேசியுள்ளார். அப்பொழுது அவர் ஆஸ்திரேலியா வந்து, ஒரு மிக சிறப்பான டீமுடன் ஆடி முதல் தொடரிலேயே வெற்றிபெறுவது மிகவும் மகிழ்ச்சயாக உள்ளது.  இதை பற்றி சொல்வதற்கே வார்த்தை இல்லை. நான் எதுவும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

சில வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். சக வீரர்கள் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர். என்னை எல்லோரும் ஊக்குவித்தனர் என கூறியுள்ளார்.