உலகக் கோப்பை 2023: பயிற்சி போட்டிகள் இன்று துவக்கம்..!!



The practice matches for the 13th Cricket World Cup starts today.

13 வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி போட்டிகள் இன்று தொடங்குகிறது.

13 வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 ஆம் தேதி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்  தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட முன்னணி அணிகளுடன் மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த தொடருக்காக தயாராகும் பொருட்டு ஒவ்வொரு அணிக்கும் தலா 2 பயிற்சி போட்டிகள் நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று 3 போட்டிகள் நடைபெற உள்ளன. பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது.

மற்றொரு போட்டியில் தென்னாப்பிரிக்கா-ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சொந்த காரணங்களுக்காக தாயகம் திரும்பியுள்ள தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா பங்கேற்கமாட்டார். அவருக்கு பதிலாக எய்டன் மார்க்ரம் அணியை வழிநடத்துவார்.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறும் 3 வது பயிற்சி போட்டியில் இலங்கை-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் இந்தியா வந்தடைந்தனர். சுமார் 13 ஆண்டுகள் கழித்து இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கு, ரசிகர்கள் அளித்த உற்சாக வரவேற்பு நெகிழ்சியளிப்பதாக அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசம் கூறியுள்ளார்.