அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
என்ன ஆச்சு விராட்கோலி!! ஆட்டம் இழந்த கோவத்தில் இப்படியா செய்வது?? இணையத்தில் வைரலாகும் வீடியோ..
ஆட்டம் இழந்த விரக்தியில் விராட்கோலி தனது பேட்டால் நாற்காலியை தள்ளிவிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற T20 போட்டியில் பெங்களூரு அணி கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 41 பந்துகளில் 59 ரன்கள் அடித்தார்.
இதனை அடுத்து 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர்கள் தொடக்கம் முதல் சற்று நிதானமாக ஆடினர். அணியின் கேப்டன் வார்னர் 37 பந்துகளில் 54 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் பெங்களூரு அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது 13 ஓவரை ஹைதராபாத் அணி வீரர் ஹோல்டர் வீசினார். அவர் வீசிய பந்தை சிக்சருக்கு தூக்க முயன்ற விராட்கோலி விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்தபோது ஆட்டம் இழந்ததால் விராட்கோலி கோவத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டார்.
மைதானத்தில் இருந்து வெளியேறும்போது பவுண்டரி லைனில் இருந்த விளம்பர பலகையை தனது பேட்டினால் ஓங்கி அடித்த விராட்கோலி, பின்னர் அங்கிருந்த நாற்காலி ஒன்றையும் தனது பேட்டினால் அடித்து தள்ளிவிட்டார். இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகிவருகிறது.
Think @imVkohli is a bit cross #IPL2021 pic.twitter.com/nzEtxry6ic
— simon hughes (@theanalyst) April 14, 2021