#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மந்தமான சூழ்நிலையிலும், பந்துகளை பறக்கவிட்ட விராட் கோலி!! புதிய சாதனையை படைத்து அசத்தல்!!
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்தது.
314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத் தொடங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானும் 1 ரன்னும், ரோகித் சர்மா 14 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். விராட்கோலி மிகவும் அதிரடியாக ஆடி சதம் அடித்துள்ளார்.
விராட் இந்த ஆட்டத்தில் அரை சதம் அடிக்கும்போது, கேப்டனாக 4 ஆயிரம் ரன்களை அடித்து வேகமாக 4 ஆயிரம் ரன்களை கடந்த கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பு டிவில்லியர்ஸ் 77 போட்டிகளில் இந்த சாதனை செய்திருந்தார். விராட் கோலி 63 போட்டிகளில் இந்த சாதனையை செய்து டிவில்லியர்ஸின் சாதனையை முறியடித்துள்ளார்.
தற்போது சிறப்பாக ஆடிய விராட்கோலி 95 பந்துகளில் 125 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார். இந்தநிலையில் இந்திய அணிக்கு தற்போது 6 விக்கெட்டுகளை இழந்து 235 ஓட்டங்களை எடுத்து தடுமாற்றத்துடன் ஆடி வருகிறது.