#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தொடரை முழுமையாக கைப்பற்றுமா இந்தியா?: பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்..!
பங்களாதேஷில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.
தற்போது 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி, சட்டோகிராமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 188 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் இன்று காலை தொடங்குகிறது.
2 போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் வீரர்கள் கடுமையான பயிற்சியை மேற்கொண்டனர். இந்த போட்டியில் டிரா செய்தாலே தொடரை கைப்பற்ற முடியும் என்றாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான ரேஸில் முன்னேற இந்த போட்டியையும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
கையில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய கேப்டன் ரோஹித் சர்மா, காயம் முழுமையாக குணமடையாதால் இந்த போட்டியிலும் பங்கேற்கமாட்டார் எண்று இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 2 வது டெஸ்ட் போட்டியிலும் கே.எல்.ராகுல் கேப்டனாக பணியாற்றுவார். இன்றைய போட்டி இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.