#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நியூசிலாந்து அபார பந்துவீச்சு; எளிதான இலக்கை நிர்ணயித்துள்ள இந்தியா வெற்றி பெறுமா?
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்த மாதம் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்கிறது. இதனால் இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 10 அணிகளும், பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வின் செய்த இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதன்படி இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர். மிகவும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர்கள் இருவரும் முறையே 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இருவரின் விக்கெட்டையும் டிரென்ட் போல்ட் கைப்பற்றினார்.
அதன் பிறகு களமிறங்கிய இந்திய வீரர்கள் யாரும் சோபிக்காததால் இந்திய அணி விரைவில் விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தது. சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஹர்திக் பாண்டியா(30) , ரவீந்திர ஜடேஜா(54) அரை சதம் அடித்து ஆறுதல் அளித்தனர். முடிவில் இந்திய அணி 39.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தனர்.
நியூசிலாந்து அணி தரப்பில் டிரென்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் நீசம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை எட்ட நியூசிலாந்து அணி தயாராகி வருகிறது.