#Breaking News# 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு!



10'th exam cancelled

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்றும் மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் செய்யப்படுவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில், மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்புக்கு விடுபட்ட தேர்வும் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். 

மாணவர்கள் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில் 80 சதவீதம் கணக்கிடப்படும் எனவும், வருகைப்பதிவின் அடிப்படையில் மாணவர்களுக்கு 20 சதவீதம் மதிப்பெண்கள் கணக்கிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பை பொறுத்தவரை விடுபட்ட மாணவர்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப மறு தேர்வு பிறகு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.