#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
350 ரூபாய் போர்வைக்கு 13 லட்சம் மதிப்புள்ள கார் பரிசா.? ஆன்லைனில் போர்வை வாங்கியவருக்கு 20 நாள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி.!
350 ரூபாய்க்கு போர்வை வாங்கிய ஒருவருக்கு 13 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்று பரிசாக விழுந்திருப்பதாக கூறி மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்தவர் சுரேஷ். இவர் சமீபத்தில் ஆன்லைன் மூலம் 350 ரூபாய் மதிப்புள்ள போர்வை ஒன்றை வாங்கியுள்ளார். போர்வை வாங்கி 20 நாட்களுக்கு பிறகு சுஜித் என்ற பெயரில் நபர் ஒருவர் சுரேஷை தொடர்புகொண்டு, நீங்கள் வாங்கிய 350 ரூபாய் போர்வைக்கு 13 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்று பரிசாக விழுந்திருப்பதாக காரின் புகைப்படத்தையும் வாட்ஸப்பில் அனுப்பியுள்ளார்.
ஆனால் உங்கள் காரை நீங்கள் எடுத்துச்செல்லவேண்டும் என்றால் 12,800 ரூபாய் வரி செலுத்தவேண்டும் என அவசரப்படுத்தியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சுரேஷ் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சுஜித் தொடர்புகொண்ட எண்ணிற்கு போலீசார் பேச முற்பட்டபோது போன் செய்வது போலீசார் என தெரிந்துகொண்ட சுஜித் தனது தொலைபேசியை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.
தற்போது அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். 350 ரூபாய் போர்வைக்கு 13 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு என கூறி மோசடியில் ஈடுப்பட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.