#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
14 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம்... தெருக்கூத்து கலைஞர்களின் செயல்... போக்சோ சட்டத்தில் கைது.!
தர்மபுரி மாவட்டத்தில் தெருக்கூத்து கலைஞர்களால் 14 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இரண்டு முதியவர்கள் மற்றும் ஒரு இளைஞரை கைது செய்து இருக்கிறது காவல்துறை.
தர்மபுரி மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் 14 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் வசித்து வருகிறார். தற்போது கோடை காலம் என்பதால் சிறுமி மட்டும் தனியாக வீட்டில் இருந்திருக்கிறார். அவரது தந்தை பணிக்கு சென்று வந்திருக்கிறார்.
கடந்த மே மாதம் 24 ஆம் தேதி அந்த கிராமத்தில் கோவில் திருவிழா நடைபெற்று இருக்கிறது. அப்போது மழை வேண்டி அர்ஜுனன் தபசு என்ற தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடைபெற்று உள்ளது. இதனைக் காண ஊர்மக்கள் அனைவரும் சென்று இருக்கின்றனர். அப்போது தெருக்கூத்து கலைஞர்களான கொல்லாபுரி(63) மணிகண்டன்(60) மற்றும் மஞ்சுநாதன்(34) ஆகிய மூன்று பேர் சேர்ந்து வீட்டில் தனியாக இருந்த மாணவியை வயல்வெளிக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் தாங்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததை வெளியே சொன்னால் சிறுமியை கொன்று விடுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சம்பவம் நடந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு சிறுமிக்கு கடுமையான உதிரப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. தனக்கு ஏற்பட்டுள்ள உடல் நலக் குறைவை குடும்பத்தினருடன் சொல்லி இருக்கிறார் சிறுமி. இதனைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில் தெருக்கூத்து கலைஞர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் மூன்று தெரு கூத்து கலைஞர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறை மூன்று பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது.