மின்மாற்றி வெடித்து சிதறியதில் 16 பேர் பலி.!!



16-members-died-in-utarkand-by-explosion-of-transformer

த்தரகாண்ட் மாநிலத்தில் அலக்நந்தா என்னும் ஆற்றங்கரையில் நாம்னே கங்கே நீர் மின்சார திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதில் ஒரு பங்காக அமைக்கப்பட்டிருந்த மின் மாற்றி திடீரென்று வெடித்து சிதறியது. இதனால் மின்மாற்றியுடன் இணைக்கப்பட்டிருந்த மின் கம்பிகள் அருந்து விழுந்ததில் 16 பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே பலியாகி உள்ளனர். 

Transformer Explosion

இதில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஐந்து ஊர்க்காவல் படை வீரர்களும் உள்ளனர். பின்னர் படுகாயம் அடைந்த ஆறு பேரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.