மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே!! அப்பள கம்பெனியில் மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளர்கள் பலி..!
விருதுநகர் மாவட்டம் அருகே உள்ள ஒரு தனியார் அப்பள கம்பெனியில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் மீது மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் சூரம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான அப்பள கம்பெனி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரும், கடமன்குளத்தை சேர்ந்த ராஜா என்பவரும் பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த அப்பள கம்பெனியில் ஹீட்டர் மெஷின் பொருத்தும் வேலை நடைபெற்று வந்துள்ளது. இதற்காக ஒரு அலுமினிய ஏணியை ராஜா எடுத்துச் சென்றபோது அவர் மீது மின்வயர் பட்டதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனையடுத்து அவரைக் காப்பாற்ற சென்ற பழனிச்சாமி மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீஸ்காரருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.