#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி வெற்றி!
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர்த்து, 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி விடுத்து நடைபெற்ற இந்த தேர்தலில் மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.
முதல்கட்ட தேர்தலில் 76 சதவீத வாக்குகளும், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73 சதவீத வாக்குகளும் பதிவானது. இந்நிலையில் இரண்டு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் என்னும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது . மேலும் இதற்காக தமிழகம் முழுவதும் 315 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கே.என். தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 21 வயது கல்லூரி மாணவி வெற்றி பெற்றுள்ளார்.
கே.என். தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 21 வயது கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும் ஊராட்சி மன்றத் தலைவராக பதவியேற்க உள்ள அவர் கர்நாடக மாநிலம் மாலூரில் தனியார் கல்லூரி ஒன்றில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை ஜெயசாரதி, இவரும் கே.என்.தொட்டி கிராம ஊராட்சி மன்றத் தலைவராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.