பேரு சதீஷ்.. வயசு 32.. பார்க்கத்தான் ஆள் அப்பாவி மாதிரி.. ஆனால் செஞ்ச காரியம் இருக்கே!! பதறவைக்கும் வந்தவாசி சம்பவம்..



32 years man harassment school girl near vandhavaasi

தெரு கூத்து பார்த்துவிட்டு வந்துகொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 6 ஆம் வகுப்பு படித்துவருகிறார். சம்மந்தப்பட்ட சிறுமி சம்பவத்தன்று இரவு அந்த பகுதியில் நடந்த தெருக்கூத்தை பார்த்துவிட்டு தனியாக வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளார்.

அப்போது அந்த வழியாக வந்த அருங்குணம் கிராமத்தை சேர்ந்த சர்க்கரை என்பவரின் மகன் சதீஷ்(32) சிறுமியை வலுக்கட்டாயமாக அருகில் இருந்த விவசாய நிலத்திற்கு தூக்கிச்சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளான். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் சிறுமியின் பாட்டி கொடுத்த புகாரை அடுத்து வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளி சதீஷை கைது செய்தனர். இதில் மேலும் கொடுமையான தகவல் என்னவென்றால், குற்றவாளி சதீஷ் இதேபோன்று 15 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வந்துள்ளார்.

ஜாமீனில் வந்த இடத்தில் தற்போது மேலும் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள குற்றவாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.