பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
44 வது செஸ் ஒலிம்பியாட்: கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டியது நிறைவு விழா..!
சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நிறைவு விழாவுடன் முடிவடைகிறது. கடந்த மாதம் 28 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார்.
பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழரின் பாரம்பரியம் ,பண்பாடு, கலாச்சாரத்தை கூறும் விதமாக கலை நிகழ்ச்சிகள் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கடந்த மாதம் 29 ஆம் தேதி முதல் மகாபலிபுரத்தில் அமைக்கப்பட்ட பிரத்தியேக அரங்கில் செஸ் போட்டிகள் நடைபெற்றன. உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் போட்டியில் பங்கேற்று விளையாடி வந்தனர்.
போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியதை அடுத்து இன்று நிறைவு விழா நடைபெற உள்ளது. இன்று மாலை நடைபெறும் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விழாவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி சிறப்பிக்கிறார்.
இந்நிலையில் தற்போது தொடங்கியிருக்கும் நிறைவு விழாவில், முதலமைச்சர் மு.க,ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், க.பொன்முடி, கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும், எம்.பிக்கள் கனிமொழி, தயாநிதிமாறன் உள்ளிட்டோரும், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனார். மேலும் செஸ் ஒலிம்பியாட் போடியில் பங்கேற்ற வீரர்கள், பயிற்சியாளர்கள் , பார்வையாளர்கள் என நேரு அரங்கம் விழாக்கோலம் பூண்டுள்ளது.