வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து! அங்கிருந்த தொழிலாளர்களின் நிலை என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்!
விருதுநகர் அருகே எரிச்சம்நத்தம் என்ற பகுதியில் ராஜலட்சுமி ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை அமைந்துள்ளது. அங்கு இன்று 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் சீனி வெடிகள் தயாரிக்கும்போது உண்டான உராய்வின் காரணமாக கடுமையான வெடிவிபத்து ஏற்பட்டு அங்கிருந்த மூன்று அறைகளும் முழுவதும் சேதமடைந்தது.
அதனால் அங்கு பணியில் இருந்த 3 பெண்கள் உட்பட 5 பேர் உடல் கருகி, உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பயங்கர தீக்காயத்துடன் சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை முழுவதும் அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீயை முழுமையாக அணைத்த பின்புதான் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரம் முழுமையாக தெரியவரும் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.