#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிக்கன் ரைஸுக்கு இப்படியொரு அக்கப்போறா?.. கடையின் உரிமையாளர் உட்பட 3 பேர் மீது எண்ணெய் ஊற்றி அடாவடி கும்பல் தாக்குதல்.!
தங்களுக்கு இலவசமாக சிக்கன் ரைஸ் தர மறுப்பு தெரிவித்த கடையின் உரிமையாளர், அவரின் மகன், பணியாளர் உட்பட 3 பேரை அடித்து சூடான எண்ணெய் ஊற்றி கொடுமை செய்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தாம்பரம், மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த நண்பர்கள் அஜித், கார்த்திக், ஹரிஹரன், பிராவின், ஜாகோ, சிவா, விக்கி. இவர்கள் சம்பவத்தன்று தாம்பரம், சேலையூர் பகுதியில் செயல்பட்டு வரும் சிக்கன் ரைஸ் கடைக்கு நேற்று இரவு 10:30 மணிக்கு சென்றுள்ளனர்.
அங்கு நண்பர்களாக அனைவரும் சிக்கன் ரைஸ் சாப்பிட்டுவிட்டு, பார்சலும் வாங்கியுள்ளனர். அனைவரும் சாப்பிட்டதற்கு பில் கொடுக்கப்பட்டுள்ளது. பில்லை வாங்கியவர்கள் பணத்தை பின்னர் தருகிறோம் என தொழிலாளியிடம் கூறியவாறு புறப்பட்டு செல்ல முயற்சித்துள்ளனர்.
இதனை அக்கடையில் பணியாற்றி வரும் இளைஞர் கவனித்து உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கிருந்த 2 பேர் கடையின் உரிமையாளரை மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்து சென்ற 5 பேரும், தங்களது தரப்பு ஆதரவாளர் என 3 பேரை அழைத்து வந்துள்ளனர்.
அவர்கள் கடையின் உரிமையாளரான ஜெயமணி, அவரது மகன் சுப்பிரமணி, கடையில் வேலைபார்க்கும் தொழிலாளி ரவி மீது தாக்குதல் நடத்தி சூடான எண்ணெய் ஊற்றி கொடுமை செய்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட மூவரும் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பாக ஜெயமணி சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து மேற்கூறிய 7 பேரும் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.