#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
15 வயது மாணவி கர்ப்பம்... தலைமறைவான பெரியப்பா... வலை வீசி தேடி வரும் போலீஸ்.!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதிக்கு அருகேவுள்ள கிராமத்தைச் சார்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பம் ஆக்கிவிட்டு தலைமறைவாக இருக்கிறார் அவரது பெரியப்பா. இது தொடர்பாக அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறது காவல்துறை.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தைச் சார்ந்த 15 வயது மாணவி ஒருவர் தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் ஆகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்திருக்கிறார் தாயார்.
அப்போது மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர் அந்த மாணவி கர்ப்பமாக இருப்பதாக கூறி அந்தப் பெண்ணின் குடும்பத்தாரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறார். இதன் காரணமாக அந்த மாணவியிடம் தாயார் விசாரணை செய்துள்ளார். அப்போது அந்த மாணவி தெரிவித்த தகவல் அனைவரையும் திடுக்கிட செய்திருக்கிறது.
அந்த மாணவியின் பெரியப்பா அவரை மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதன் காரணமாகத்தான் அந்த மாணவி கர்ப்பமாக இருக்கிறார் என்ற உண்மை தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெரியப்பாவிற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் விசாரணை செய்த காவல்துறை அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. தன்மீது புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த நபர் தலைமறைவாகிருக்கிறார். அவரை காவல்துறை வலை வீசி தேடி வருகிறது.