மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துப்பட்டாவால் நேர்ந்த விபத்து.. இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து பெண் பலி.!
கோவை மாவட்டம் ராமநாதபுரம் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த சாந்தகுமாரி தனது மகன் ராகுலுடன் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். பின்னர் வேலை முடிந்து அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்துள்ளனர்.
அப்போது சாந்தகுமாரி வாகனம் சிங்காநல்லூா் திருமண மண்டபம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அவர் அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டா இருசக்கர வாகனத்தின் பின்ச்சக்கறத்தில் சிக்கியுள்ளது. இதனால் சாந்தகுமாரி இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் சாந்தகுமாரியின் தலை மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ராகுல் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் சாந்தகுமாரி மற்றும் ராகுலை உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் ராகுலுக்கு முதலுதவி செய்தனர். மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் சாந்தகுமாரி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சாந்தகுமாரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து கோவை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.