திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
கல்லூரி மாணவர்களுக்கு உற்சாக செய்தி.. லேப்டாப், டேப்லெட், கல்விக்கடன் வசதிகள்.. பட்ஜெட்டில் அறிவிப்பு.!

2025 - 2026 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல், இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்றது. சட்டப்பேரவை அறிவிப்புகளை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், மொத்தமாக 932 இடங்களில், தமிழ்நாடு முழுவதும் சிறப்பு காணொளி நேரடி ஒளிபரப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அடுத்த 25 ஆண்டுகளை கருத்தில் கொண்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று பல்வேறு புதிய திட்டங்களும் மக்களுக்காக அறிவிக்கப்பட்டன. இந்த திட்டங்கள் வரும் காலத்தில் செயல்படுத்தப்படும் என்பதால், அதனை எதிர்பார்த்து மக்களும் காத்திருக்கின்றனர். குறிப்பாக கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை மையப்படுத்தி பல்வேறு அறிவிப்புகள் கல்வித்துறையின் சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அரசுப்பணியாளர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. என்னென்ன? விபரம் இதோ.!
மடிக்கணினி வழங்கும் திட்டம்:
அதன்படி, வரும் 2 ஆண்டுகளில் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவியர்களின் கல்வியை உறுதி செய்ய, அவர்களுக்கு தொழில்நுட்ப கல்வி உறுதியாக கிடைத்திட 20 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. 1721 முதுகலை ஆசிரியர்கள், 841 பட்டதாரி ஆசிரியர்கள் கல்லூரிகளில் பணிநியமனம் செய்யப்படவுள்ளனர்.
புதிய பாடத்திட்டங்கள்
தமிழ் புதல்வன் திட்டத்துக்கு ரூ.50 கோடி, புதுமைப்பெண் திட்டத்துக்கு ரூ.4000 கோடி, அரசுப்பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு, சைபர் செக்யுரிட்டி, ரோபோடிக்ஸ் படங்கள் அரங்கும், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதலாக 15000 கல்வி இடங்கள் உருவாக்கம், 2500 கோடி அளவில் கல்விக்கடன் வழங்க ஏற்பாடு என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
12ம் வகுப்பு, டிப்ளமோ கல்வி நிறுவனங்களில் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு முன்னதாக மடிக்கணினி வழங்கப்பட்ட நிலையில், பின் அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் நலனுக்காக, மடிக்கணினி அல்லது டேப்லெட் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசுப்பணியாளர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. என்னென்ன? விபரம் இதோ.!