TN Budget 2025: கலைஞர் உரிமை தொகை ரூ.1000 - வெளியானது புதிய அறிவிப்பு.!



TN Budget 2025 Women's Safety Announcement 

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025 - 2026 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல், இன்று நடைபெற்றது. சட்டப்பேரவை அறிவிப்புகளை மக்கள் தெரிந்துகொள்ள மொத்தமாக 932 இடங்களில், சிறப்பு காணொளி நேரடி ஒளிபரப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று பல்வேறு புதிய திட்டங்களும் மக்களுக்காக அறிவிக்கப்பட்டன. இந்த திட்டங்கள் வரும் காலத்தில் செயல்படுத்தப்படும்.

அந்த வகையில், மகளிர் நலனுக்கான அறிவிப்பில், பல புதிய திட்டங்களை செயல்படுத்த அரசு தயாராக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரூ.75 கோடி செலவில் மாநகராட்சியில் உள்ள பெண்களின் பாதுகாப்புக்கு புதிய நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் நலனுக்காக ரூ.13000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: TN Budget 2025: பரந்தூரில் விமான நிலையம் உறுதி.. ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையத்திற்கு ஏற்பாடு.!

புதிய விண்ணப்பங்கள்

விடியல் பயணத்திற்கு ரூ.3500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், வரும் காலங்களில் புதிய விண்ணப்பங்கள் பெறப்படும். சுயஉதவி குழுக்களுக்கு ரூ.37000 கோடி வரையில் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதுமைப்பெண் திட்டத்துக்காக ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 10000 புதிய மகளிர் சுயஉதவிக்குழுக்கள் ஏற்படுத்தப்படும். மதுரை, கோவை, சேனை நகர்களில் மாணவியர் விடுதி அமைக்க ரூ.225 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 10 நகரங்களில், 800 பெண்கள் தங்கும் வகையிலான தோழி விடுதிகள் ரூ.77 கோடி செலவில் அமைக்கப்படும். 
 

இதையும் படிங்க: சமூக நல்லிணக்கத்தை கடைபிடித்தால் ரூ.1 கோடி பரிசுத்தொகை; அதிரடி அறிவிப்பு.!