திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
TN Budget 2025: பரந்தூரில் விமான நிலையம் உறுதி.. ராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையத்திற்கு ஏற்பாடு.!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025 - 2026 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல், இன்று நடைபெற்றது. சட்டப்பேரவை அறிவிப்புகளை மக்கள் தெரிந்துகொள்ள மொத்தமாக 932 இடங்களில், சிறப்பு காணொளி நேரடி ஒளிபரப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று பல்வேறு புதிய திட்டங்களும் மக்களுக்காக அறிவிக்கப்பட்டன. இந்த திட்டங்கள் வரும் காலத்தில் செயல்படுத்தப்படும்.
பரந்தூரில் விமான நிலையம் உறுதி
அந்த வகையில், மாநில அளவிலான வளர்ச்சிப்பணிகளை ஊக்குவிக்கும் பல்வேறு அறிவிப்புகள் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. சென்னைக்கு அருகில் புதிய நகரம் தொழில்நுட்ப வசதி, கல்வி நிறுவனங்கள் என பல அம்சத்துடன் உருவாக்கப்படுகிறது. பரந்தூர் விமான நிலைய பணிகளும் துரிதப்படுத்தப்படும்.
ராமேஸ்வரத்தில் விமான நிலையம்
தென்மாவட்டங்களில் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் அல்லது இராமநாதபுரம் பகுதியில் புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்படும். விமான நிலையங்கள் விரிவாக்கம் தொடர்பான பணிகளுக்கு ரூ.2398 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: சமூக நல்லிணக்கத்தை கடைபிடித்தால் ரூ.1 கோடி பரிசுத்தொகை; அதிரடி அறிவிப்பு.!
பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என உள்ளூர் மக்கள் போராடி வரும் நிலையில், விமான நிலையத்துக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பாமக, நாதக, தவெக ஆகிய கட்சிகள் மாற்று இடங்களில் விமான நிலையத்தை செயல்படுத்த கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களுக்கு உற்சாக செய்தி.. லேப்டாப், டேப்லெட், கல்விக்கடன் வசதிகள்.. பட்ஜெட்டில் அறிவிப்பு.!