# Breaking அனைத்தும் ரத்து.! தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு.!!



all-corona-cases-canceled

கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்தநிலையில், தற்போது கொரோனா பரவல் சமீப காலமாக குறைந்து வருகிறது. தமிழகத்திலும் சமீப காலமாகவே கொரோனா பரவல் குறைத்துக்கொண்டு வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

case

அங்கு அவர் பேசுகையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் முக கவசம் அணிவது உள்ளிட்ட பிரிவுகளில் பதிவான வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார். இதன் மூலம், கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்குகள் உள்ளிட்டவை அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. 

மாநிலத்தில் சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகளுள், வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இ-பாஸ் பெற்று பயன்படுத்தியது மற்றும் காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போன்றவைத் தவிர மற்ற அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார்.